Published : 12 Jan 2018 09:10 AM
Last Updated : 12 Jan 2018 09:10 AM

இது இந்திய இலக்கியப் பொங்கல்!- ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இரண்டாம் நாளில்...

ரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் தினத்தன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தொடங்கும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழா ஜனவரி 16 வரை நடக்கவிருக்கிறது. மூன்று நாட்களும் மூன்று அரங்குகளில் முழுமையான இலக்கியப் பொங்கல்! முதல் நாள் அமர்வுகள் குறித்து நேற்று பார்த்தோம். இரண்டாம் நாளின் முக்கிய அமர்வுகள் குறித்து இங்கே.

திங்கள் நிகழ்வுகள்…

கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிய காலை அமர்வில் சந்தன் கவுடா, ஹ்யோன்ஸியோ லீ, சதஃப் சாஸ், டி.எம். கிருஷ்ணா, டீஸ்டா செடல்வாட் ஆகியோருடன் உரையாடுகிறார் ‘தி இந்து’ முன்னாள் ஆசிரியர் என்.ரவி. தேசப்பிரிவினைக் காலத்தைப் பற்றி குல்ஸாரும் ஷாந்தனு சௌத்ரியும் உரையாடுகிறார்கள். தமிழ் எழுத்தாளர் பாமா, சம்பையா கண்டிமேடா, ஷரன்குமார் லிம்பாலே ஆகியோருடன் தலித் இலக்கியத்தைப் பற்றி உரையாடுகிறார் மினி கிருஷ்ணன். மேலும் ஷோபா டே, வித்யா சிங், ஜிக்னேஷ் மேவானி, எஸ்.ஜி.வாசுதேவ், விவேக் ஷன்பேக், அரிமளம் பத்மனாபன், வி.ஸ்ரீராம், ஸ்வரூப ராணி, ப்ரேமா ரேவதி, வ.கீதா, மாளவிகா நடராஜ் முதலான ஆளுமைகள் இடம்பெறும் வெவ்வேறு அமர்வுகள் மூன்று அரங்குகளிலும் நடைபெறுகின்றன.

பிற்பகல் 3.20-4.15 வரை விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் விழாவின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கு இந்த விழாவில் விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் ‘தி இந்து பிரைஸ்’ விருதுக் குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவரின் பெயர் இந்த விழாவின்போது அறிவிக்கப்பட்டு அந்த எழுத்தாளருக்கு விருது வழங்கப்படவிருக்கிறது. ‘தி இந்து யங் வேர்ல்டு-குட்புக்ஸ்’ விருதுகளும் இந்த விழாவில் வழங்கப் படுகின்றன.

அசோகமித்திரனைக் குறித்து ப்ரஸன்னா ராமஸ்வாமி எடுத்த ஆவணப்படத் திரையிடலும் இரண்டாம் நாள் நிகழ்வுகளின் சிறப்பம்சங்களுள் ஒன்று.

(மூன்றாம் நாள் நிகழ்வுகள் குறித்து நாளை…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x