Published : 25 Dec 2017 12:54 PM
Last Updated : 25 Dec 2017 12:54 PM

ஆர்.கே.நகர் களம்!

ரவிக்குமார்

ஆர்கே நகரில் பாஜக வாங்கும் வாக்குகளைப் பார்த்த பிறகும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று தோன்றவில்லை!

வேடியப்பன் எம் முனுசாமி

பாஜகவா? நோட்டாவா? பாத்திருவோம்!

கார்ல் மார்க்ஸ் கணபதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் நாம் உணர்ந்துகொள்ள முக்கியமான மூன்று விஷயங்கள்!

1. வாக்குக்குப் பணம் என்பது தேர்தல் குறித்த எல்லாக் கணக்கீடுகளையும் மாற்றும் வல்லமை கொண்டதாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த அமைப்பே சீர்குலையும்போது, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிர்வாக அமைப்புமுறைகள் கேலிக்கூத்தாகின்றன. இது எல்லா வகைகளிலும் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

2. தினகரனை நம்புவதற்கு மக்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எடப்பாடி வகையறாவின் அடிமைச் சேவகமும் ஸ்டாலினின் காற்றில் கம்பு சுற்றும் அரசியலும் மக்களைச் சோர்வூட்டுகின்றன. எப்படிப் பார்த்தாலும் இங்கு திமுக வென்றிருக்க வேண்டும். குறியீட்டுரீதியாக அது மட்டுமே நல்ல சமிக்ஞையாக இருந்திருக்க முடியும்.

3. தமிழகத் தேர்தல் என்பது மற்ற எந்த மாநிலத் தேர்தலையும்விட மிகவும் ஆபாசமானதாக மாறிக்கொண்டிருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அது இன்னும் உச்சியை எட்டும் என்பதன் முன்னோட்டமே இந்த இடைத்தேர்தல். நமது அற்ப சாய்வுகளின் பொருட்டு நாம் மிக வேகமாக அடிப்படை மதிப்பீடுகளைக் கைவிட்டுக்கொண்டிருக்கிறோம். தனிமனிதர்களாக அறமற்று நாம் சீரழிவது கேள்வி கேட்கும் பண்பை இல்லாமலாக்குகிறது. இப்போதைய தேர்தல்கள் அதை துரிதப்படுத்தவே நடக்கின்றன!

கதிர்வேல்

நீங்கல்லாம் தினகரனை சுயேச்சை வேட்பாளரா பாத்தீங்கடே... ஆர்கே நகர் ஜனங்க அவரை சர்வ கட்சி வேட்பாளரா பார்த்திருக்காங்க. இல்லாட்டி எல்லாக் கட்சி ஓட்டும் அண்ணனுக்கு விழுந்திருக்குமா? யோசிங்கடே!

சுபகுணராஜன்

அதிமுக உட்கட்சித் தேர்தலாக மாறிவிட்டது இந்தத் தேர்தல். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரலாற்றின் தொடர்ச்சியா? அப்படியென்றால், குற்றம் திமுக மீதும்தானே? நீங்களும் ‘இதை’ச் செய்தீர்கள்! ஆர்.கே . நகர்தான் ‘ தமிழக மாதிரி’ என்றால்அரசியல் பேச யோசிக்க வேண்டும். # வெட்கித் தலைக்குனிகிறேன்.

வில்லவன் ராமதாஸ்

உசுரைக் காப்பாத்திக்க ஆஸ்பத்திரி போவாங்க. ஆனா ஆஸ்பத்திரி போயி மானத்தைக் காப்பாத்திக்கிட்ட மறத்தமிழன் கங்கை அமரன்தான்!

சதீஷ் குமார்

கோவத்துல நோட்டா பாகிஸ்தானோட சதின்னு சொல்லிட போறார் எச்.ராஜா!

சரவணன் சந்திரன்

கட்சிகள் சார்ந்த பொருளாதாரத்தில், மக்கள் தங்களுக்கான பங்கை முன்பெல்லாம் கேட்டுப் பெற்றார்கள். இப்போது உரிமையாய் அடித்துக் கேட்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோருக்குமான பங்கையும் உள்ளடக்கியதே நல்ல வியாபாரம். எந்தக் கட்சியாக இருந்தாலும் சட்ட மன்ற உறுப்பினர் சீட் கேட்கும் கனவில் இருப்பவர்கள் குறைந்தது இருபது கோடி ரூபாயைப் புரட்டிவைக்கவும்!

ராமமூர்த்தி ஜிகே

ஐம்பதாண்டு கால சூரியன் இருபது நாள் குக்கரிடம் பின்தங்குவது சம்பந்தமாக சூடான விவாதம் செய்வது ஆரோக்கியம்!

தமிழ் சசி

திமுக தோற்றதற்குக் காரணம் வைகோவின் ராசிதான். இப்படிக்கு, திமுக பகுத்தறிவு பாசறை!

கவிதா சொர்ணவல்லி

இந்தத் தோல்வி என்பது கண்டிப்பாக திமுகவின் தோல்வி மட்டுமே. திமுக தன்னைச் சீர்செய்துகொள்ளவில்லை என்றால், மீதமிருக்கும் மூன்றரை வருடங்களில், தினகரன் அசாதரணமானவராகி இருப்பார். அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் பதவி என்பது ஸ்டாலினுக்கு கானல் நீராகத்தான் ஆகியிருக்கும்!

சுகர் ஜெயபாலன்

சின்னம் முக்கியமல்ல என்று மக்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் !

அபு சாலி

பாஜக தலைமையே! ஹெச். ராஜாவை விட மக்கள் செல்வாக்கு படைத்தவர் தான்தான் என்பதை நிரூபித்த கரு நாகராஜனை தேசியச் செயலாளராக்கு!

தளவாய் சுந்தரம்

2011 தேர்தலில்கூட பணம் பட்டுவாடா செய்தவர்களில் சிலர் தோற்றுவிட்டதாகவும் மக்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று அவர்கள் புலம்பியதாகவும் கேள்விப்பட்டேன். இன்னும் சிலர் தேர்தல் ஆணையம் கெடுபிடி காரணமாகப் பணத்தைப் பட்டுவாடா செய்ய முடியாமல் திணறினர். 2016-ல் தேர்தல் ஆணையத்துக்குக் கண்ணாமூச்சி காட்டும் கலை கைவரப் பெற்றது. வெற்றிகரமாகப் பட்டுவாடா செய்தவர்கள் வெற்றிபெற்றார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வேட்பாளர் 30,000 வாக்குகளில் உறுதியாக வெல்வோம் என்னும் நம்பிக்கையுடன் இருந்தவர். அதனால் எல்லா பகுதிகளிலும் பணம் விநியோகிக்கவில்லை. கடைசியில் 600 சொச்சம் வாக்குகளில் தோற்றுப்போனார். எனது நண்பர் ஒருவர், “ஒரு அலையும் கிடையாது; கூடுதலாக 30 கோடி ரூபாய் செலவழித்திருந்தால் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம்” என்று தேர்தல் முடிந்த பிறகு சொன்னார்.

ரஜினியோ கமலோ - இனி அதிகம் யார் செலவழிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றிபெற முடியும் என்பது 2016 தேர்தலிலேயே உறுதியானது. இப்போது தமிழ்நாட்டின் யதார்த்தம் ஆகிவிட்டது. உண்மையில் சாவு மணி தமிழ்நாட்டுக்குத்தான்!

ஆழி செந்தில்நாதன்

தோற்றாலும் பரவாயில்லை என்று பணம் தராமல் களம் கண்ட திமுகவினருக்கு உள்ளபடியே மனம் நிறைந்த பாராட்டுகள். எங்கேயாவது இந்தஆட்டம் நின்றாக வேண்டும். யாராவது அதை நிறுத்தியாக வேண்டும். அதைத் தொடங்கியதற்காக ஸ்டாலினை வாழ்த்தியே ஆக வேண்டும்.

ஆனால் திமுக வெற்றி பெறாமல் போனதற்கு வேறு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி காது கொடுத்து கேட்கும்பொறுமையும் பிறர் மீதான மதிப்புடைமையும் அவர்களுக்கு வரும்போது விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x