Published : 08 Aug 2014 09:30 AM
Last Updated : 08 Aug 2014 09:30 AM

சமஸ்கிருதமே இந்தியாவை ஒருங்கிணைக்கிறது: சென்னையில் மார்க்கண்டேய கட்ஜு பேச்சு

‘ஒய்-ஸ் மென்’ (ஒய்எம்சிஏ) கிளப்புகளின் 71-வது மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இம்மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளை உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியும் இந்திய பிரஸ் கவுன்ஸில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மார்க் கண்டேய கட்ஜு பேசியதாவது:

இந்தியாவில் 93 சதவீதம் பேர் வெளியிலிருந்து வந்தவர்கள். தோடர்கள் போன்ற பழங்குடியின மக்களே இந்தியாவின் பூர்வ குடிகள் ஆவர். ஆனால் இன்றைக்கு அவர்கள் 6 முதல் 7 சதவீதம் என்கிற அளவிலேயே உள்ளனர். இந்தியா, மொழி, மதம், இனம், உணவு, கலாச்சாரம் என்று பல்வேறு விதங்களில் வேறுபட்டு கிடக்கிறது. இப்படிப்பட்ட இந்தி யாவை சமஸ்கிருதம் மட்டுமே ஒருங்கிணைக்கிறது. அறிவியல், வான சாஸ்திரம், மருத்து வம் போன்றவற்றிலும் சமஸ் கிருதத்தின் பங்களிப்பு அதிக ளவில் உள்ளது. இன்றும் நாம் அவற்றை பல வழிகளில் பின்பற்றி கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு சிலர் வேண்டு மென்றே பிரச்சினைகளை உருவாக்குவதற்காக சில கருத்துக் களை சொல்லி வருகிறார்கள். இவை நாட்டை பிளவுப்படுத்தி வேடிக்கை பார்ப்பதற்காக செய்யப் படுகிறது.

இந்தியா 1700-ம் ஆண்டுக்கு முன்பு எவ்வளவோ வளங்களை கொண்டிருந்தது. ஆனால் ஒற்றுமை யின்மையால் நாம் அவற்றை இழந்தோம். இப்போதும் நமக்கு வாய்ப்புகள் உள்ளன. நாம் மதம், மொழி இனம், என்று பிளவு பட்டு அந்த வாய்ப்புகளை இழந்து விடக்கூடாது. எல்லோரும் ஒன்றாக இணைந்து நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்தில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தேவ், ‘நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்திருந்தால் பள்ளிகளில் கீதையை கட்டாய பாடமாக்கியிருப்பேன்’ என்று கூறியிருந்தார். இதனை மார்க் கண்டேய கட்ஜு கடுமையாக ஆட் சேபித்திருந்தார். இந்நிலையில் சென்னை வந்த அவர் மேற்கண்ட வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x