

ஈழம், மலையகம், கூடலூர் என மூன்று நிலப்பரப்புகளையும், அங்கு வாழும், வாழ்ந்த மனிதர்களையும், அவர்களின் வாழ்வையும் புனைந்துகாட்டும்
சிறுகதைகளின் தொகுப்புதான் பிரசாந்த் வே எழுதிய ‘சிலோன்’. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தில் அமைந்து பன்முகப்பட்டு விரிகிறது.
அவை வெறும் கதையோட்டங்களாக இல்லாமல் வாழ்க்கையாகவே தோற்றமளிக்கின்றன. ஈழப்புலத்தின் கொடுமைகளையும் புலம்பெயர்வின் கொடுமைகளையும் எளிய சொற்களால் வலிமையான முறையில் நம்மில் கடத்தி விடுகிறார் எழுத்தாளர்.
‘ரிப்போர்ட்டர்’ - அந்தத் தொழிலின் வெறுமை நிலையையும் அதன் உன்னத நிலையையும் ஒருங்கே காட்டி அமைகின்றது. ‘இன்னும் கொஞ்ச தூரம்’ - புலம்பெயர்வு வாழ்வை, துயரைக் கடத்துகிறது.