

வெப்சீரிஸ்கள் குறித்து திரைப்பட ஆர்வலர் சங்கர்தாஸ் எழுதிய இரண்டாவது நூல் ‘வெடிகுண்டு மர்மங்கள்’. கடந்த 1993, 2010 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைப் பேசுகிறது ‘Scoop’வெப் சீரிஸ்.
குண்டுவெடிப்புக்குப் பின்னால் உள்ள உண்மைகளைக் கண்டறிய போராடும் பெண் பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், துயரங்களுடன், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கொல்லப்படுதலில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது இந்நூல்.