

கடலளவு கருத்துகளைக் கடுகளவு சொல்லில் அடைத்த மந்திரச் செப்பு திருக்குறள். மதம், இனம், மொழி என மனிதன் வகுத்துக்கொண்ட எல்லைகளைத் தகர்த்து, ‘மானுடம்’ என்ற ஒற்றைப் புள்ளியில் அகிலத்தை இணைக்கும் வல்லமை இதற்குண்டு.
அத்தகைய சிறப்புமிக்க திருக்குறளிலிருந்து 100 குறட்பாக்களைத் தேர்வு செய்து, இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் ‘வள்ளுவம் 2.0’ என்ற நூலைப் படைத்துள்ளார் மருத்துவர் ப.இரமேஷ்.
காலந்தோறும் புதிய பரிமாணங்களை அடைந்து கொண்டே இருக்கும் திருக்குறளை, இன்றைய தலைமுறையின் மனவோட்டத்துக்கு ஏற்ப அவர் அணுகிய விதம் பாராட்டுக்குரியது.