

வானியல் ஆர்வலர்களுக்கு இரவு வானை உற்று நோக்குவது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது. இரவு வானை பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் என தொடர்ச்சியாக உற்றுநோக்கும் பழக்கம் கொண்ட ஆர்வலர்களால்தான், இந்த பிரபஞ்சம் குறித்த பல புதிர்களுக்கு விடை காண முடிந்தது.
அந்த வகையில், சி.ராமலிங்கம் எழுதிய ‘வானத்தை நோக்கிய கண்கள்’ என்ற இந்நூல், விண்ணைத் தொடர்ந்து உற்றுநோக்கி, ஆராய்ந்து, பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்த விஞ்ஞானிகளைப் பற்றியது ஆகும்.
“பிரபஞ்சத்தின் மையமாக பூமிதான் உள்ளது” என்று புவி மையக் கொள்கையை உரைத்த தாலமியில் இருந்து இந்நூல்தொடங்குகிறது. தொடர்ந்து, பித்தகோரஸ், நிக்கோலஸ் கோபர் நிக்கஸ், ஆரியபட்டா, சர் ஐசக் நியூட்டன், எட்மன்ட் ஹாலி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சுப்பிரமணியன் சந்திரசேகர் என 40 விஞ்ஞானிகள் வானியல் அறிவியல் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து இந்நூல் பேசுகிறது.