வாழ்வு குறித்த நடைச்சித்திரம்

வாழ்வு குறித்த நடைச்சித்திரம்
Updated on
1 min read

‘வானமெங்​கும் என் சிறகு’ கவிஞர் கலை​பார​தி​யின் அபுனை​வு. சின்​னச் சின்​னக் கட்​டுரைகள். மன்​னார்​குடியி​லிருந்து வெளிவரும் ‘கண்​ணா​மூச்​சி’ இதழில் வெளிவந்​தாவை. கல்​வி, ஆசிரியர் – மாணவர் உறவு, அன்​பு, நட்​பு, ஊர்ப்​புற வாழ்​வு, காதல், இலக்​கி​யம், மனித உறவு​கள்​... பற்​றிய முப்​பத்​தி​யாறு குறுங்​கட்​டுரைகள். வாய்​மொழி நடை​யும், கவித்​துவ மொழி​யும் வாசகரை ஈர்க்​கின்​றன.

எளிய நேர்ப்​பேச்சு போல அன்​றாட வாழ்​வில் எதிர்​கொள்​ளும் தருணங்​களை, அனுபவங்​களை எழுத்​தாக்​கித் தரு​கிறார். தன் மாணவப் பரு​வத்​தில் தன்​னைக் கவர்ந்த ஆசிரியர்​களை அழகாகக் காட்​சிப்​படுத்​துகிறார்.

அதேபோல் தான் ஆசிரிய​ராக இருக்​கும் போது தன்​னில் கரைந்த மாணவர்​களை​யும் பதிவு செய்​கிறார். திரு​மணத்​துக்கு ஆசிரியரை அழைத்து தலைமை தாங்​கச்​சொன்ன, ஆசிரியர் பெயரை தம் குழந்​தைக்​குச் சூட்​டிய மாணவர்​களை நெகிழ்​வுடன் சுட்​டு​கிறார். அருகி வரும் ஆசிரியர் – மாணவர் நல்​லுற​வின் சான்​றுகள் இவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in