

இன்றைய இளைஞர்கள் வாசிப்பது குறைந்துவிட்டது உண்மைதான். அதேநேரம் திருச்சியைச் சேர்ந்த வானம் கலை இலக்கிய மன்றம் கல்லூரி, பள்ளி மாணவர்களை வாசிக்கவும் எழுதவும் ஊக்குவிக்கிறது.
இதற்காக எழுத்துப் பயிலரங்குகளை ஒருங்கிணைக்கிறது. மாணவ எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடுவதற்காகவே ‘வானம்’ என்கிற காலாண்டு இதழை நடத்திவருகிறது. திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்த இதழைக் கொண்டுவருகிறார்கள்.