

சென்னை புத்தகக் காட்சியில் சூழலியல் நூல்களுக்கான தனித்தன்மையுடன் சில அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, பூவுலகின் நண்பர்கள் அரங்கில் சூழலியல் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான அரசியலை முன்னிறுத்திய ஏராளமான நூல்கள் இருந்தன.
‘மரபீனி மாற்றப்பட்ட நெல்’, பிரபாகரன் வீர அரசு எழுதிய ‘பசுமை ஹைட்ரஜன் உண்மையான மாற்றா?’ போன்ற நூல்களும், வெற்றிச் செல்வனின் ‘அரசியல் சூழலியல்’, சூழலியல் பெண் போராளிகள் பற்றிய கவிதா முரளிதரனின் ‘துலிப் மலர்களின் கதை’, லோகேஷ் பார்த்திபன், ராகேஷ் தாரா எழுதிய ‘அழியும் புவியின் அரண்கள்’ ஆகிய நூல்கள் இருந்தன.
காக்கைக் கூடு அரங்கில் கோவை சதாசிவம், ஆதி வள்ளியப்பன், நக்கீரன், வறீதையா கான்ஸ்தந்தின், ச.முகமது அலி, தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட பிரபல சூழலியல் எழுத்தாளர்கள் பலரது நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.