

பெண் சார்ந்த உணர்வுகளை நோக்கி குவிமையப்படுத்தப்பட்ட கவிதைகள் இவை. சகோதரி சுமித்ராவின் பல கவிதைகள் பெண் குறித்த கரிசனம் கொண்டவை.
அவர் பறவை பற்றி பேசினால் அதை நேர்ப்பொருளில் ‘பறவை’ என்று எடுத்துக்கொள்ளலாகாது. அவர் குறிப்பிடும் ‘பறவை’ என்னும் சொல்லுக்குள் இருப்பது குடும்பச் சுமையின் கனத்தால் அழுத்தப்பட்ட ஒரு பெண்ணின் ஆன்மா.
/ தாமதமாய் கூடு திரும்பும் / நீர்ப்பறவை ஒன்றின் / தனித்த குரல் / தவித்துப் பறக்கிறது / ‘பறவை’யை குறியீடாக்கி சொல்லப்பட்ட இன்னொரு கவிதை ஆண் பெண் இயல்பின் மற்றொரு பரிமாணத்தைப் பேசுகிறது.
/ பறவையொன்று / கடலிலிருந்து கவ்விச்செல்லும் / ஒற்றை மீன் போலத்தான் / ஒரு பெண் ஒரு ஆணை... / / மடிவலையோடு / கடலின் அடிமடியில் / இறங்குவது போலத்தான் / ஓர் ஆண் பல பெண்களை.../ உடலின்பத்திற்கான வாய்ப்பாகத்தான் காதலை அணுகுகிறான் ஆண்.