நூல் நயம் | தனித்து தெரியும் தன்வரலாற்று நூல்

நூல் நயம் | தனித்து தெரியும் தன்வரலாற்று நூல்
Updated on
1 min read

தமிழ் இலக்​கி​யத்​தில் பல்​வேறு மாற்று முன்​னெடுப்​பு​களை நிகழ்த்​திய தமிழ​வன், ‘உல​கச் சிந்​தனை​யில் கிளைப் பரப்​பிய ஒரு மரம்’ என்ற பெயரில் தன்​வரலாற்று நூலொன்றை எழு​தி​யுள்​ளார். உலக அளவில் தன்​வரலாற்று நூல்​களுக்கு ஒரு முக்​கிய​மான இடம் இருக்​கிறது.

உலகத் தலை​வர்​கள், இலக்​கிய ஆளு​மை​கள், அறி​வியல் அறிஞர்​கள், விளை​யாட்டு வீரர்​கள், தத்​துவ ஆசிரியர்​கள், வணிக வெற்​றி​யாளர்​கள் எனப் பலர் தங்​களது வாழ்க்​கையை நூல்​களாக எழு​தி, பெருந்​திரளான வாசகர்​களால் வாசிக்​கப்​பட்​டும் வரு​கின்​றன.

ஒரு தன்​வரலாற்று நூல் இப்​படித்​தான் எழுதப்பட வேண்​டும் என்​ப​தற்கு எந்​தவொரு வரையறையை​யும் உரு​வாக்க முடி​யாது. ஏனெனில், தன்​வரலாறும் புனை​வெழுத்து போன்று கட்​டற்ற ஓர் எழுத்து வடிவம்​தான்.

தன்னை எழுதுதல் தன்​வரலாறாக இருக்க முடி​யாது என்று கூறும் தமிழ​வனின் இந்த நூலைக்​கொண்டு அவரது பிறந்த தேதி​யைக்​கூடக் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை. சமூகம், அரசி​யல், கலை, பண்​பாடு, விழு​மி​யங்​கள் என அனைத்​தும் தன்​வரலாற்று நூலுக்​குள் இடம்​பெற வேண்​டும். ‘நான்’ என்​கிற தன்​னிலையை வெளியே நிறுத்​தி​விட்டு எழுதும்​போது​தான், அது சமூகத்​திற்கு முக்​கி​யத்​து​வம் கொடுக்​கக்​கூடிய வரலாறாக இருக்​கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in