

ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் பல்வேறு பரிமாணங்களே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.
எனினும், முன் பின்னான கதைச் சொல்லாடலில், தர்மு பிரசாத்தின் மொழி வழியே ஒன்பது அத்தியாயங்களையும் கடந்த பின்பு, பெரும் போருக்குப் பின்னான அயர்ச்சியும், ஆழ்ந்த உறக்கம் தேடும் மனநிலையும் வாசகருக்கு வாய்க்கும்.
மொழி வழியான ஆதிக்கம், நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்து உரிமைக்கான அமைதி வழி போராட்டங்கள் பயனளிக்காத நிலையில், நிலத்தின் பூர்வகுடி என்ற வரலாற்றுப் பெருமித உணர்வோடு, ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவாகிறது.