மகளிர் சிறப்பிதழ்

மகளிர் சிறப்பிதழ்
Updated on
1 min read

உலக உழைக்கும் மகளிர் நாளை (மார்ச் 8) ஒட்டி அறிவியல் இதழான ‘விஞ்ஞானத் துளிர்’, முழுமையாக பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இதழின் சிறப்பாசிரியராக சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் இ.ஹேம பிரபா செயல்பட்டுள்ளார்.

இந்திய ரயில்வே துறையின் முதல் பெண் பொறியாளர் ம.கலாவதியிடம் அறிவியல் எழுத்தாளர் தேமொழிச்செல்வி எடுத்த நேர்காணல், சாக்பீஸை சாப்பிடுவதற்கும் ரத்த சோகைக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து டாக்டர் அனுரத்னா, இந்தியாவின் முன்னோடிப் பெண்கள் சந்தித்தால் எப்படி இருக்கும் என்கிற ரஞ்சனி எழுதிய கற்பனை உரையாடல், அன்பு வாகினி எழுதிய மகளிர் தினத்தின் கதை என குறிப்பிடத்தக்க கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in