அகதி​களின் எல்லை வலி | நூல் வெளி

அகதி​களின் எல்லை வலி | நூல் வெளி
Updated on
2 min read

போருக்கு பின்​னான ஈழ படைப்​பு​களில், யுத்​தத்​தின் தாக்​கத்​தை​யும் அது கொடுத்த வலிகளையும் பார்த்​திருக்​கிறோம். அ.முத்​துலிங்​கத்​தின் ‘கட​வுள் தொடங்​கிய இடம்’ நாவலைப் போல இன்​னும் சில, போலி கடவு சீட்டு மூலம் புலம்​பெயர் தமிழர்​கள், நாடு​களின் எல்​லைகளில் எதிர்​கொள்​ளும் நினைத்​துப் பார்க்க முடி​யாத கொடுமை​களை​யும் அலைகழிப்​பு​களை​யும் சிக்​கல்​களை​யும் பேசி​யிருக்​கின்​றன. அந்த வகை​யில் சயந்​தனின் ‘திசை ஒன்​பது’ நாவலும் அது போன்​றதொரு பிரச்​சினையைப் பேசுகிறது.

'ஐரோப்​பிய எல்​லை​யில் எட்​டுத் திசைகளும் அடைக்​கப்​பட்ட பிறகு ஒன்​ப​தாவது திசைக்​காகக் காத்​திருக்​கும் ஓர் அகதியின் கதை இது' என்று சயந்​தன் இந்​நாவலை வரையறுத்​தா​லும் அது பல்​வேறு நாட்டு எல்​லைகளில், வேலி தாண்ட துடிக்​கிற, அம்​முயற்​சி​யில் தோல்​வி​யுற்று மனதுக்​குள் தவிக்​கிற, வேறொரு நாட்​டில் அமை​தி​யான வாழ்க்​கைக்​காக ஏங்கி புழுங்​கு​கிற ஏராள​மானோரின் கதை.

சுவிஸ் நாட்​டுக்​குத் தஞ்​சம் தேடிச் செல்​கிற இளங்​கோவை மைய​மாகக் கொண்​டு, தன் வரலாற்று பாணி​யில் செல்​கிறது இந்​நாவல். நான் லீனியர் முறை​யில் சொல்​லப் பட்​டிருக்​கும் உண்​மைச் சம்​பவங்​களின் அடிப்​படை​யில் எழுதப்​பட்​டிருக்​கிற இக்​கற்​பனைக் கதை, முதல் பக்​கத்​தில் இருந்தே எளி​தாக உள்​ளிழுத்​துக் கொள்​வதற்கு சயந்​தனின் எள்​ளலுடன் கூடிய அழகான மொழிநடை​யும் காரணம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in