புலம்பெயர் வாழ்வுகளின் கனம்

புலம்பெயர் வாழ்வுகளின் கனம்
Updated on: 
1 min read

சமகாலத் தமிழ் எழுத்தாளர் களில் குறிப்பிடத்தகுந்தவர் அ.முத்துலிங்கம். அவரது சிறுகதைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, “என்னுடைய அனுபவங்களை யாராலும் திருட முடியாது” என்ற முத்துலிங்கத்தின் கூற்றையே தலைப்​பாக்​கியிருக்​கிறார் தொகுப்​பாசி​ரியர் அருள்​செல்​வன்.

வெவ்​வேறு புவி​யியல் பின்​புலங்​களில் புலம்பெயர் அனுபவங்​களைப் பதிவுசெய்​திருக்​கும் கதைகளையே அவர் இத்​தொகுப்​புக்​காகத் தேர்வு செய்​ திருக்​கிறார். வெவ்​வேறு நாடுகளைக் களமாகக் கொண்ட ஒவ்​வொரு கதையிலும் யாரேனும் ஒரு​வர் புலம்​பெயர்ந்​தவ​ராக இருக்​கிறார். கதை சொல்​லியும் புலம்​பெயர்ந்​தவர் எனும் நிலை​யில், ஒரே கதைக்​குள் பல்​வேறு அனுபவங்​கள் ஏற்​படு​கின்​றன.

பெரும் துயரம் சுமந்த வாழ்க்​கையை, எட்ட நின்று வேடிக்கை பார்ப்​பவரின் பொருத்​தமற்ற பகடியையும் முத்​துலிங்​கம் மறைக்​காமல் முன்​வைக்​கிறார். அதேபோல், யூதாஸ் தற்​கொலை செய்து​கொண்ட மரத்​தின் இலைகள் நடுங்​கு​வதையும், பணிந்து வாழ்ந்தே பழகிய மனிதரின் கைகள் நடுங்​கு​ வதையும் இணைத்​துப் பார்க்​கிறார்.

இத்​தொகுப்​பின் ஒவ்​வொரு கதையையும் படிக்​கும்​போது புலம்​பெயர்​வது என்​பது என்ன? எல்லா புலம்​பெயர்​வும் ஒரே தன்​மையி​லானதா? அவர்​கள் சுமக்​கும் அனுபவங்​களின் கனம் ஒன்றா? அவர்​கள் பின்​பற்​றும் சடங்​கு​கள் வெறும் மதத்​தின்​பாற்பட்​ட​வையா? வீட்டை விட்டு வெளியே வரு​வதில்லை என்​ப​தற்​குப் பின்​னால் உள்ள வரலாறு என்ன? இப்​படிப் பல கேள்​வி​கள் வாசகர்​களுக்​குள் எழும். அவற்​றுக்​கான பதில்​களைக் கதைக்​குள்​ளேயே கண்​டடையத் தூண்​டு​கிறார் ஆசி​ரியர்.

முத்​துலிங்​கத்​தின் மொழி​யாளுமை நிச்​சயம் பிரமிக்க வைக்​கும். ஏதோ ஒரு நாட்​டில் ஓடும் ஏதோ ஒரு நதி​யைக் கூட, ‘லராமி ஆறுதானே, நம்​மூர் வழி​யாத்தான் ஓடுது’ என்ற தன்​மையில் நம்​முள் கடத்​தி​விடு​கிறார்.

மொழிபெயர்ப்பு கதைகளுக்​கும், புலம்​பெயர் கதைகளுக்​கும் உள்ள வேறு​பாடு அவற்​றின் உணர்வு வெளிப்​பாடுகள்​தாம். எழுத்​தாளர், வாசகர் இருதரப்பு வெளிப்​பாடுகளை​யும் சேர்த்தே குறிப்​பிடு​கிறேன். காட்​டின் நினைவு​களைச் சுமந்​து​கொண்டு இர​வில் கூக்​குரல் எழுப்​பும் சர்க்​கஸ் விலங்​கின் மொழி தெரிந்​தவர்​கள் உலா​வும் தொகுப்பு இந்​நூல்.

அ.முத்துலிங்கத்தின் ‘திருடமுடியாத கதைகள்’

தொகுப்பாசிரியர்: அருள்செல்வன்

காலச்சுவடு பதிப்பகம்

விலை: ரூ.320

தொடர்புக்கு: 04652 278525

- sivarajbharathi.s@hindutamil.co.in

புலம்பெயர் வாழ்வுகளின் கனம்
நிம்மதியாகத் தூங்குவது எப்படி? | நம் வெளியீடு
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in