

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) சார்பில் ‘சென்னை தினம் 2026’ முன்னிட்டு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னையின் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நகர வளர்ச்சி தொடர்பான தலைப்புகளில் மாணவர்கள் தங்களது சொந்தக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.
கட்டுரைகள் ஆகஸ்ட் 14க்குள் Google Form மூலம் அனுப்பப்பட வேண்டும். வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 19 அன்று அறிவிக்கப்படுவார்கள். பரிசளிப்பு விழா ஆகஸ்ட் 22 அன்று MIDS வளாகத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு: 91509 44464