

சீர் வாசகர் வட்டம் சார்பில் 2026ஆம் ஆண்டுக்கான சீர் விருது வழங்கும் விழா, மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. பேராசிரியர் ஆ.சீநிவாசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், 2026-ஆம் ஆண்டுக்கான சீர் விருது மார்க்சிய ஆய்வாளர் பேராசிரியர் நா.முத்துமோகனுக்கு வழங்கப்படுகிறது. மார்க்சிய ஆய்வில் முத்துமோகனின் பங்களிப்புகள் தொடர்பாக பேராசிரியர்கள் வீ.அரசு, இரா.முரளி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.