கொல்கத்தா லஹக் மற்றும் நாமக்கல் தமிழ்ச் சங்கம் சார்பில் மான் பகதூர் லஹக் விருது வழங்கும் விழா இன்று (01-11-2026) பிற்பகல் 4 மணிக்கு நாமக்கல், தங்கம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இவ்விருது பெறும் எழுத்தாளர் பெருமாள்முருகன் படைப்புகள் குறித்து டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் கரண் சிங் சௌஹான், எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன், மதுரை தமிழ்ப் பேராசிரியர் ஞா.குருசாமி ஆய்வுரை நிகழ்த்த, மருத்துவர்கள் தீப்தி மிஸ்ரா, அருணாபிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். மேலும், இந்நிகழ்வில் ஜெய்சங்கர் பாபு, கோ.நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொள்ள பெருமாள்முருகன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.