

கரிசல் இலக்கியத்தின் நாயகர் என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவைப் போற்றும் வகையில், கோவை விஜயா பதிப்பகத்தின், விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த படைப்பாளிகளுக்கு ‘கி.ரா. விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.5 லட்சம் விருதுத் தொகையும் பாராட்டுக் கேடயமும் கொண்டது. இந்த விருதுத் தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கோவையில் நடைபெறும் விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், விருதினை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.