

தூரிகை கவிதை விருது 2025 தேர்வுக்காக சமூகம், பெண்ணியம், அழகியல் சார்ந்த நவீன கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. கவிதை நூல், 2025ஆம் ஆண்டில் வெளியாகியிருக்க வேண்டும். ஒரு பெண், ஓர் ஆண் என இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் நூலின் இரண்டு பிரதிகளை வரும் மே 5ஆம் தேதிக்குள் தூரிகை அறக்கட்டளை, எச்.92, எம்.எம்.டி.ஏ. காலனி, திருப்பூர் குமரன் தெரு, அரும்பாக்கம், சென்னை – 600 106 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறக்கட்டளையின் நிறுவனரான திரைப் பாடலாசிரியர் கபிலன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 93840021339
பயிலரங்கம்: திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளிகள் சார்பில் வெளிக்காற்று உள்ளே வரட்டும்… என்ற தலைப்பில் இளம் தலைமுறைக்கான 5 நாள் பயிலரங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) தொடங்கியது. வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) வரை நடைபெறுகிறது.பள்ளித் தலைவர் ஏ.ராமசாமி தலைமையில் தொடங்கிய இந்த விழாவில், செயலாளர் பி.சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார். புதுடெல்லி தேசிய சுங்க இலக்கு மைய துணை இயக்குநர் பூ.கொ. சரவணன், அரசியல் அமைப்பு உருவான கதையுடன் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார்.