கல்விக் கொள்கையில் சமரசம் கூடாது

கல்விக் கொள்கையில் சமரசம் கூடாது
Updated on: 
1 min read

கல்வி என்​பது காலத்​துக்​கேற்ப மேம்​பட வேண்​டும். அனைத்​துத் தரப்பு மாணவர்​களும் மேம்​பட்ட கல்​வியைப் பெறு​வதற்​கான கொள்​கைகள் அனைத்​தையும் உள்​ளடக்​கிய​தாக உரு​வாக்​கப்​பட வேண்​டும்.

ஆனால், அறி​விக்​கப்​பட்ட நாளில் இருந்தே பல்​வேறு சர்ச்​சைகளை எதிர்​கொண்டு வரு​கிறது இந்​தி​யாவின் புதிய கல்​விக் கொள்கை. கல்​விக் கொள்​கைகளும் கொள்​கையை உரு​வாக்​கும் குழுக்​களும் நமக்​குப் புதிதல்ல.

ராதாகிருஷ்​ணன் ஆணை​யம் (பல்​கலைக்​கழக கல்வி ஆணை​யம்), லக் ஷ்மணசாமி முதலியார் ஆணை​யம் (இடைநிலைக் கல்வி ஆணை​யம்), கோத்​தாரி ஆணை​யம் (தேசிய கல்வி ஆணை​யம்), புதிய கல்​விக் கொள்கை (1986) போன்​றவற்​றோடு பெண் கல்​விக்​காக துர்​காபாஷ் தேஷ்​முக் தலை​மையில் அமைக்​கப்​பட்ட தேசி​யக் குழு (1958), ராமமூர்த்தி குழு (1990), யஷ்​பால் குழு (1993, 2009) உள்​ளிட்ட குழுக்​களும் இந்​தி​யாவின் கல்​விக் கொள்​கையை வடிவ​மைத்​ததில் பங்​காற்​றியுள்​ளன.

Loading content, please wait...

X