

சென்னைப் புத்தகக் காட்சியில் இந்தாண்டு ஏராளமான மக்கள் பதிப்பு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நூல்களுக்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதைக் காண முடிந்தது. சீர் வாசகர் வட்டம் சார்பில் அ. மங்கை மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ராகுல சாங்கிருத்யாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ரூ.150க்கு விற்பனை ஆகிறது.
இந்நூல் மொத்தம் 424 பக்கங்களைக் கொண்டது. ஜியாங் ரோங் எழுதிய ஓநாய் குலச்சின்னம் நூலை சி. மோகன் மொழியாக்கம் செய்துள்ளார். 696 பக்கங்கள் கொண்ட இந்நூல் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரன் கார்க்கியின் 376 பக்கங்களைக் கொண்ட கருந்துளை என்கிற புதிய நாவல், ரூ.250க்கும், ஜெயந்தன் சிறுகதைகள் 760 பக்கங்களில் தொகுக்கப்பட்டு ரூ.350க்கும், 736 பக்கங்கள் கொண்ட விந்தன் கதைகளின் தொகுப்பு ரூ.225க்கும் சீர் அரங்கில் விற்கப்படுகின்றன.