

ஸ்வீடன் எழுத்தாளரான லீசா ரிட்சனின் இந்த நாவல் வெளியானதுமே பரபரப்பாகப் பேசப்பட்டது. இதன் மொழி பெயர்ப்பு உரிமை, பல்வேறு நாடுகளுக்கு உடனடியாக விற்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் வெளியான பின் உலகம் முழுவதும் சிறந்த கவனம் பெற்று வரும் இந்நாவல், வாழ்ந்து முடித்துவிட்ட ஒரு மனிதன், முதுமையில் எதிர்கொள்ளும் அகப் போராட்டங் களையும் அவனுடைய பலவீனங்களையும் யதார்த்தமாகப் பேசுகிறது.
தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் இருக்கும் 89 வயதான போ, தன்னை பராமரிப்பவர்களின் கண்காணிப்பில் வசிக்கிறார். சிக்ஸ்டன் என்ற செல்ல நாய் அவருக்கு அனைத்துமாக இருக்கிறது. அது ஓர் உறவாகி அவருடன் நடைபயிற்சிக்குச் செல்கிறது, அவருடன் தூங்குகிறது.