

நாவல்களைப் போன்றதல்ல சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு. ஒரு தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள் அனைத்தும் பெரும்பாலும் ஒற்றைத்தன்மையாகவோ ஒருபொருளை மட்டுமே பேசுபவையாகவோ இருப்பதில்லை.
வெவ்வேறு காலத்தையும் நிலத்தையும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுபவையாக அவை இருக்கும்.