தமிழ்நலம் கருதிய ஆளுமைகள் | நூல் வெளி

தமிழ்நலம் கருதிய  ஆளுமைகள் | நூல் வெளி
Updated on
1 min read

தன்​வரலாறு எழு​திய தமிழ் அறிஞர்​கள் மிகக் குறை​வான பேர்​தான். தங்​களது விரி​வான பணி​கள் குறித்து இதழ்​களில் சுருக்​க​மான நேர்​காணல் வெளி​யிடப்​படு​கிற வாய்ப்​பு​கூடக் கிடைக்​கப்​பெறாமலே வாழ்ந்து மறைந்​து​விட்ட அறிஞர்​கள் பலர். மிகச் சிலருக்கு அவர்​களது குடும்​பத்​தினரோ, நண்​பர்​களோ வாழ்க்கை வரலாறு எழு​தி​யிருக்​கின்​றனர்.

பொது​வாக, தமிழறிஞர்​களின் பங்​களிப்பு குறித்து ஆவணப்​படுத்​து​வ​தில் தமிழ்ச் சமூகம் பின்​தங்​கி​யுள்​ளதை மறுக்க முடி​யாது. 1950களுக்​குப் பிறகு செயல்​பட்ட பல அறிஞர்​கள் குறித்த முறை​யான பதிவு​கள் இல்லை என்​பது வேதனைக்​குரியது. ‘தகை​சால் தமிழ்த் தொண்​டர்​கள் - தொகுதி 1’, அந்​தக் குறையைப் போக்​கும் வகை​யில் வெளிவந்​துள்ள ஒரு நூல். இது 42 அறிஞர்​களது பங்​களிப்​பைச் சுருக்​க​மாக​வும் சுவாரசி​ய​மாக​வும் முன்​வைக்​கிறது.

முனை​வர் மு. இளங்​கோவன் இந்​நூலை எழு​தி​யுள்​ளார். இவர் இந்​திய அரசின் ‘செம்​மொழி இளம் அறிஞர் விருது’, தமிழக அரசின் ‘தூய தமிழ் ஊடக விருது’ உள்​படப் பல விருதுகளைப் பெற்​றவர்; தற்​போது புதுச்​சேரி அரசு காஞ்சி மாமுனிவர் அரசு பட்​டமேற்​படிப்பு மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தமிழ்த்​துறைத் தலை​வ​ராகப் பணிபுரி​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in