

ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகள் பலவற்றின் எழுத்துரு பாணிகள் பல உண்டு. ஆனால், அவற்றின் வரி வடிவத்தில் இருக்கும் ஒழுங்கும் நேர்த்தியும் சீர்மைமிக்க உடற்கூறியலும் எத்தனைவிதமாக எழுதினாலும் மாறாமல் இருக்கும்.
தமிழ் எழுத்துகள் அப்படி அமைந்திருக்கின்றனவா? அவற்றின் அளவு, எல்லை உள்ளிட்டவை உலகம் முழுக்க ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுகின்றனவா? இந்தக் கேள்விகளை எழுப்பி அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதோடு, அது எவ்வளவு ஆழமானது என்பதையும் ‘தமிழ் எழுத்தொழுங்கு’ நூலில் உதாரணங்களோடு விளக்குகிறார் நாக.இளங்கோவன்.
குழந்தைகளுக்குத் தமிழ் எழுத்து வடிவங்களை அறிமுகப்படுத்த, இரண்டு கோடுகள் கொண்ட குறிப்பேட்டைப் பயன்படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கம். ஆனால், ஆறு கோட்டொழுங்கைப் பின்பற்றுவதே சரியான, சிறந்த வழி என்கிறது இந்நூல்.