அறிவுக் கருவூலத்தின் புதிய பரிமாணம் | நூல் வெளி

அறிவுக் கருவூலத்தின் புதிய பரிமாணம் | நூல் வெளி
Updated on
2 min read

வாழ்​வியற் களஞ்​சி​யம், அறி​வியல் களஞ்​சி​யம், நாட்​டுப்​புறக் கதைக் களஞ்​சி​யம், பாலியல் கலைக்​களஞ்​சி​யம், மூலிகைக் கலைக்​களஞ்​சி​யம், தமிழிசைக் கலைக்​களஞ்​சி​யம், மருத்​து​வக் களஞ்​சி​யம் என்று ஏராள​மான களஞ்​சிய நூல்​கள் தமிழில் உள்​ளன.

இதற்​கெல்​லாம் முன்​னோடி​யாக விளங்​கு​வது, ம.ப. பெரிய​சாமித்​தூரனை முதன்மை ஆசிரிய​ராகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்ட ‘கலைக்​களஞ்​சி​யம்​’​தான். Encyclopaedia என்ற ஆங்​கிலச் சொல்​லுக்கு நிக​ராகக் ‘கலைக்​களஞ்​சி​யம்’ என்ற சொல்லை உரு​வாக்​கிய​வர் தெ.பொ. மீனாட்​சிசுந்​தர​னார்.

தமிழ் வளர்ச்​சிக் கழகத்​தின் தோற்​றம்

சென்னை மாநிலக் கல்வி அமைச்​ச​ராக இருந்த தி.சு. அவி​னாசிலிங்​கம் செட்​டி​யார், 1946ஆம் ஆண்​டில் ‘தமிழ் வளர்ச்​சிக் கழகம்’ என்ற அமைப்பை உரு​வாக்​கி​னார். ஆங்​கிலத்​தி​லுள்ள Encyclopaedia போன்று தமிழிலும் கலைக்​களஞ்​சி​யங்​களை உரு​வாக்​கு​வதையே இக்​கழகம் முதன்​மைப் பணி​யாக மேற்​கொண்​டது.

கலைக்​களஞ்​சி​யத்​தின் முதல் தொகுதி 1954ஆம் ஆண்டு 742 பக்​கங்​களு​டன் வெளிவந்​தது. கலைக்​களஞ்​சி​யத்​தின் பத்​தாவது தொகுதி இணைப்​புத் தொகு​தி​யாக 1968இல் வெளிவந்​துள்​ளது.

களஞ்​சி​யத்​தின் உள்​ளடக்​கம்

கலைக்​களஞ்​சி​யத்​தில் தமிழ், தாவர​வியல், விலங்​கியல், தத்​து​வம், சமயம், உளவியல், அளவை​யியல், ஆங்​கிலம், நாடகம், இசை, புள்​ளி​யியல், விவ​சா​யம் போன்ற நாற்​பத்​தேழு துறைகள் சார்ந்த சொற்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

2240 அறிஞர்​கள் இச்​சொற்​கள் குறித்து எழு​தியுள்​ளனர். இந்தப்​ 10 தொகு​தி​களை​யும் வெளி​யிட 21 ஆண்டுகள் (1947-1968) ஆகி​யுள்​ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in