

கண்டுபிடிப்புகளாலேயே மனிதன் மனிதனானான். இல்லையெனில் இன்னும் குரங்கைப் போல் மரங்களில் தாவிக்கொண்டிருப்பான்.
ஆதி மனிதன் கருவிகளை உருவாக்கி வேட்டையாடினான்; தீயை மூட்டிச் சமைத்தான்; சைகை பேசினான்; பின்பு ஒலிகள் கொண்டு மொழியைக் கட்டமைத்தான்; வேளாண்மை செய்யக் கற்றுக்கொண்டான்; காடு கொன்று நாடாக்கினான்; நகரம் செய்தான்.
இப்படி மனித இனத்தின் இன்றியமையாத கண்டுபிடிப்புகள் எல்லாம் மனிதன் காட்டுவாசியாக, நாகரிக மற்றவனாக இருந்தபோது நடந்தேறியவைதாம்.