

பணத்தின் மதிப்பு குறித்துப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்காத பெற்றோர்கள் அபூர்வம்தான். குழந்தைப் பருவத்திலேயே பொருளாதாரத்தைப் புரிய வைக்க இந்நூல் முயல்கிறது; ஒரு குடும்பத்தில் தந்தைக்கும் பிறருக்குமான கலந்துரையாடல் மூலம் பொருளாதாரம் குறித்து விளக்குகிறது.
நிதி நிர்வாகம் குறித்த எழுத்துக்காக நன்கு அறியப்பட்ட சோம வள்ளியப்பன் இந்நூலை எழுதியுள்ளார். வருமானம், முதலீடு, கடன் வகைகள், வட்டி, பணவீக்கம் உள்ளிட்ட செய்திகளைச் சிறுவர்கள் எளிதாக உள்வாங்கும்வகையில் நூல் எழுதப்பட்டுள்ளது. பெரியவர்கள் தெரிந்துகொள்ள விரும்பும் செய்திகளும் நூலில் உண்டு.