

நாவல் என்ற சொல் ‘நாவல்லா’ என்னும் இத்தாலியச் சொல்லிலிருந்து உருப்பெற்றது. புனைகதைகள் என்ற உள்ளடக்கத்துள் அடங்கும் இந்நாவல்களை இலக்கிய வடிவாக ஏற்றுக்கொள்கின்ற போக்கானது சமீப காலத்தில் தோன்றியது. மேலை நாடுகளிலும் ஒரு நூறாண்டுகளாகத்தான் நாவலுக்கு இலக்கிய தன்மை கிடைத்திருக்கிறது.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நாவலுக்கான இலக்கிய மதிப்பு 1950களுக்குப் பின்னர்தான் எழுச்சி பெற்றிருக்கின்றன. நாவல் இலக்கிய உருவாக்கத்தின் முன்னோடி நாடாக ஐரோப்பா திகழ்கிறது.