சமகாலத்​தின் இசை​வாக சங்​கப்​பாடல் உரைத்​ தொகுப்பு | நூல் வெளி

சமகாலத்​தின் இசை​வாக சங்​கப்​பாடல் உரைத்​ தொகுப்பு | நூல் வெளி
Updated on
1 min read

சங்​கப் பாடல்​கள் குறித்து முன்​னாள் அமைச்​சர் வைகைச்​செல்​வனின் சொற்​பொழி​வுத் தொகுப்புகள் இவை. மொத்​தம் 415 பாடல்​கள், ஐந்து தொகு​தி​களாகத் தொகுக்​கப்​பட்​டுள்​ளன. பாடலின் நூற்​பெயர், அகப்​பாடலா புறப்​பாடலா, திணை, துறை என்​னவென்​ப​தை​யும் தெரிவிக்​கிறார். சங்க இலக்​கிய சிறப்​பு​கள், தமிழர் வாழ்​வியலின் முறைமை​களை எளிய கோணங்​களில் அகழ்ந்​தெடுத்​துத் தரு​கிறார்.

இந்​நூலில், ‘தமர்​தன் தப்​பின்​...’ எனத் தொடங்​கும் புற​நானூற்​றுப் பாடல் ஒன்​று, இளவெ​யினி என்ற பெண்​பாற்​புல​வர் இயற்​றியது. இது மன்​னன் ஏறைக்​கோனைப் பற்​றியது. தலை​வனின் பண்​பு​கள் குறித்​தும் இப்​பாடலில் வரு​கிறது.

‘தமக்கு வேண்​டிய​வர் தவறு செய்​தால் பொறுத்​துக்​கொள்​ளுதல், பிறர் தவறு செய்​தால் அதற்​காக தான் நாணுதல், போரில் திறமை​யைக் காட்​டு​தல், வேந்​தர் அவை​யில் பெரு​மிதத்​துடன் நடத்​தல்’ எனக் ​கூறும் நூலாசிரியர், நகர்ந்​துசெல்​லும் மேகங்​களைத் தடுத்து மழையைப் பொழி​விக்​கும் மலைச்​சிகரத்​திற்கு இணை​யாக அரசனை ஒப்​பிடும் இளவெ​யினி​யின் புலமை​யை​யும் வியக்​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in