தனித்தமிழில் என்ன இருக்கிறது?

தனித்தமிழில் என்ன இருக்கிறது?
Updated on
1 min read

கற்கும்தோறும் சுவைபயக்கக் கூடியது இலக்கிய ஆராய்ச்சி. சங்க இலக்கிய பதிப்பு தொடர்பாக ஐந்து தலைப்புகள், திருக்குறள் உரை

யில் ஏற்பட்ட பாடபேதம் பற்றி ஒரு தலைப்பு என இந்நூலில் ஆறு கட்டுரைகள் அமைந்துள்ளன.

அதற்கு முன் அமைந்துள்ள ஆசிரியர் ஆ.மணியின் முன்னுரைப் பகுதியே அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. உ.வே.சா., ஒரு கல்லூரி ஆசிரியராக இருந்தும், கும்பகோணம் முன்சீப்பாக வந்த சேலம் இராமசாமி முதலியாரிடத்தில் தமிழிலக்கிய விரிவை அறிந்துகொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ள அனுபவ சாற்றை நமக்கு இலகுவான தமிழில் பிழிந்து தருகிறார் ஆ.மணி.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in