பொருளாதார விழிப்புணர்வுக் கையேடு | நம் வெளியீடு

பொருளாதார  விழிப்புணர்வுக் கையேடு | நம் வெளியீடு
Updated on
1 min read

மாறிவரும் உலகப் பொருளா​தா​ர​மும், நடுத்தர வர்க்​கத்​தின் அன்​றாடப் போராட்​ட​மும் தலை​முறை​கள் கடந்து தொடர்​கின்​றன. வாழ்க்​கை​யின் இந்​தச் சுழலில் சிக்​கித் தவிக்​கும் எளிய மனிதர்​களுக்​கு, ஒரு பொருளா​தார வழி​காட்​டி​யாக உதவி செய்​கிறது சோம வள்​ளியப்​பனின் ‘சம்​பளம் பத்​தலை​யா?’ எனும் இந்​நூல்.

தொழில்​நுட்​பத்​தின் வரவால் பழைய வர்த்தக ஆட்​டங்​கள் கலைக்​கப்​பட்​டு, புதிய ஆட்​டக்​காரர்​கள் களம் கண்​டுள்​ளனர். உலக மாற்​றத்​தைப் புரிந்து கொண்​ட​வர்​கள் புதிய வழிகளில் வரு​மானம் ஈட்ட, ஏனையோர் தவிக்​கின்​றனர். இந்த விழிப்​புணர்வை இந்​நூல் ஏற்​படுத்​துகிறது.

செலவை வளரும் பிள்​ளைக்​கும், வரு​மானத்தை ஆடைக்​கும் ஒப்​பிடும் ஆசிரியரின் உவமை சிறப்​பானது. பிள்​ளை​யின் வளர்ச்​சி​யைப் போல தேவை​களும் வளரவே செய்​யும்; அதற்​குப் பணவீக்​க​மும் ஒரு முக்​கிய காரணம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in