

ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றிய பெருமிதம் இருக்கும். அதனை வெறுமனே வாய் வார்த்தையோடு நிறுத்திவிடாமல், முகநூலில் 400-க்கும் மேற்பட்ட குறிப்புகளாக எழுதிய சேலத்தில் பிறந்த ஈசன் டி.எழில் விழியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 177 குறிப்புகளின் தொகுப்பே இந்நூல்.
இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான மாவட்டம் சேலம் என்பதும், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் தமிழக முதல்வர்கள் நால்வர் உருவானார்கள் என்பதும், மலைகளின் அரசன் எனப்படும் ஏற்காடு, இரும்புக் களஞ்சியம் கஞ்சமலை, ஸ்டீல் பர்னிச்சர்களின் தாய்வீடு என பல பெருமைகளையுடையது சேலம்.