தொன்மங்களின் பாதையில் நவீன வாழ்வியலின் சுவடுகள் | நூல் வெளி

தொன்மங்களின் பாதையில் நவீன வாழ்வியலின் சுவடுகள் | நூல் வெளி
Updated on
2 min read

இ​தி​காசங்​களை மீட்​டுரு​வாக்​கம் செய்​வது இருப​தாம் நூற்​றாண்​டிலேயே தொடங்​கி​விட்​டது. நவீன இலக்​கிய​வா​தி​கள், தங்​கள் படைப்​பு​களில் தற்​கால வாழ்க்​கை​யின் பல்​வேறு அனுபவங்​களை​யும் உணர்​வு​களை​யும் சித்​தரிப்​ப​தற்​காக தொன்​மங்​களைப் பயன்​படுத்​தி​யுள்​ளனர்.

அவ்​வகை​யில், இரா​மாயணத் தொன்​மங்​களைப் பயன்​படுத்​தித் தமிழில் எழுதப்​பட்ட சிறுகதைகளைத் தொகுத்​து, ‘ராவணன் காதல்’ என்​னும் தலைப்​பில் நூலாக வெளி​யிட்​டுள்​ளார், சுப்​பிரமணி இரமேஷ்.

இரா​மாயணம், மகா​பாரதம் ஆகிய இதி​காசங்​களும், சிலப்​ப​தி​காரம், மணிமேகலை ஆகிய காப்​பி​யங்​களும் மக்​களின் மனதில் இன்​றைக்​கும் செல்​வாக்​கைச் செலுத்​துகின்​றன. இன்​றைய பண்​பாட்​டைக் கட்​டமைக்​கும் வலிமைமிக்​கவை​யாக​வும் உள்​ளன.

இரா​மாயணத்​தில் இடம்​பெற்ற அகலிகை, சீதை, ஊர்​மிளை, இராமன், இராவணன், இலக்​குமணன் முதலிய கதை​மாந்​தர்​களை நவீன இலக்​கிய​வா​தி​கள் சிறுகதைகளில் எவ்​வாறு மீள்​வாசிப்​புச் செய்​தார்​கள் என்​ப​தைப் புரிந்​து​கொள்​ளும் வண்​ணம் சுப்​பிரமணி இரமேஷ் பதினேழு சிறுகதைகளைத் தொகுத்​துள்​ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in