

‘தலைவர்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்’ என்பது பிரபலமான பொன்மொழி. ‘புதிய பாதை புதிய தலைமை’ நூலில், தலைவர் என்பவர் ஓர் அரசியல் கட்சியையோ பெரிய அமைப்பையோ வழிநடத்துபவர் மட்டுமல்ல; குடும்பம், பள்ளி, கிராமம், அலுவலகம் என எந்தச் சூழலிலும் உலகைச் சிறப்படையச் செய்ய முனையும் ஒவ்வொருவருமே தலைவர்தான் என்கிறார் நூலாசிரியர் க.பழனித்துரை.
நான்கு கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ள இந்த நூலில், புத்தகத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள பொருளடக்கம், அந்தப் பகுதியில் விவாதிக்கப்படும் கருத்துகளைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தி இருப்பதால் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது.