

அரவிந்தன், கடந்த இரண்டாண்டுகளில் எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பு இது. பல கதைகளில் பத்திரிகைப் பணி சார்ந்த ஒருவர் வருகிறார்; அவரது குடும்பம் மாநகரத்தில் படும் சிரமங்கள் என்பதாகவே இக்கதைகள் விரிகின்றன. பத்திரிகை ஆசிரியர் ஒருவரைப் பற்றியது ‘கதையின் முடிவு’.
அவர் வீட்டுக்கு பிஸியோதெரபிஸ்ட் பணிக்குவரும் பெண் ஒருவர், பிரசுரம் செய்யக் கோரி ஒரு கதையைத் தருகிறார். அதைப்படித்து அதிருப்தியாகி நாசுக்காக வெளிப்படுத்த முயற்சிக்கிறார் ஆசிரியர். அப்பெண்ணோ, “சரியாகப் படித்துவிட்டு பேசுங்கள்” எனக் கூறிவிட்டு செல்கிறார். அடுத்தமுறை கேட்டால் எப்படி சமாளிப்பதென யோசித்து மன உளைச்சலாகிறது. நகரம்சார்ந்து அரிதான பதிவு இது.