புதியவாழ்வை எதிர்நோக்கி... | நூல் வெளி

புதியவாழ்வை எதிர்நோக்கி... | நூல் வெளி
Updated on
1 min read

அமெரிக்கா சுதந்​திரம் அடைந்து 250 ஆண்​டு​கள் ஆகி​யுள்​ளன. அமெரிக்​கா​வில் அடிமை முறையை எதிர்த்​துப் போராடி அமெரிக்க வளர்ச்​சி​யின் அங்​கம் நாங்​கள் என உலகறிய வெற்​றிக்​கொடி நாட்​டிய​வர்​கள் கறுப்​பினத்​தவர்​கள்.

அவர்​கள் வரலாறு எழுதப்​ப​டா​மல் அமெரிக்​கா​வின் வரலாற்றை எழு​தி​விட​முடி​யாது. ‘பு​திய கறுப்​பர்​கள்’ என்ற இந்த நூல் நியூ​யார்க் அருகே ‘ஹார்​லெம்’ என்ற இடத்​தில் ஏற்​பட்ட ஒரு புதிய மறுமலர்ச்சி காலத்​தின் ஆழ அகலங்​களை அலசுகிறது.

அதில் முக்​கிய பங்​காற்​றிய​வர்​களை நினை​வு​கூரும்​வித​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட கட்​டுரைகள் இந்​நூலில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அமெரிக்​கா​வின் தென்​மாநிலங்​களில் அடிமை​களாக வாழ்ந்த கறுப்​பினத்​தவர்​கள் புதி​ய​தாக தோன்​றிய ரயில் போக்​கு​வரத்​தின் வாயி​லாக வடமாநிலங்​களை நோக்கி புதிய வாழ்வை எதிர்​நோக்கி இடம்​பெயர்ந்​தனர்.

அவ்​வகை​யில் சிகாகோ, ஒக்​லஹோ​மா, நியூ​யார்க்கை நோக்கி அவர்​கள் இடம்​பெயர்ந்​தது ‘தி கிரேட் மைக்​ரேஷன்’ என்று அழைக்​கப்​படு​கிறது. நியூ​யார்க்​கில் ‘ஹார்​லெம்’ என்ற பகு​திக்கு கறுப்​பினத்​தவர்​கள் பெரு​மள​வில் வந்து குடியேறத் தொடங்​கினர். அவ்​வகை​யில் ‘ஹார்​லெம்’ வீதி​களில்​தான் தனது வாழ்க்​கையை மால்​கம் எக்ஸ் தொடங்​கி​னார் என்​பதும் இந்நூலில் உள்ள ஓர் அரிய செய்​தி​யாகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in