எழுத்தாளர் சூடாமணியின் கதைகளில் சிறு சிறு நெருடல்களுக்குகூட பதில் இருக்கும்: ‘செந்தமிழ் சிற்பிகள்’ நிகழ்ச்சியில் பேராசிரியர் கே.பாரதி புகழாரம்

| படம்:எஸ். சத்தியசீலன் |

| படம்:எஸ். சத்தியசீலன் |

Updated on
2 min read

சென்னை: ​திருமண வாழ்க்​கை​யில் நிகழக்​கூடிய சிறு சிறு நெருடல்​களுக்​கு​ கூட எழுத்​தாளர் ஆர்​.சூ​டா​மணி​யின் கதைகளில் பதில் இருக்​கும் என சென்​னை​யில் நடந்த ‘செந்​தமிழ் சிற்​பிகள்’ நிகழ்ச்​சி​யில் பேராசிரியர் கே.​பாரதி தெரி​வித்​துள்​ளார்.

பள்​ளிக்​கல்​வித் துறை​யின் பொது நூலக இயக்​ககம் மற்​றும் அண்ணா நூற்​றாண்டு நூல​கம் சார்​பில் ‘செந்​தமிழ் சிற்​பிகள்’ உரையரங்​கம் தொடரின் 21-வது நிகழ்​வு, கோட்​டூர்​புரத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பெண் விடு​தலை, சமூகம் மற்​றும் குடும்ப உறவு​களை தனது தனித்​து​வ​மான படைப்​பு​கள் வழியே முன்​னிறுத்​திய ‘எழுத்​தாளர் ஆர்​. சூ​டா​மணி​யின் சிறுகதைகளில் குடும்ப உறவு​கள்’ என்ற தலைப்​பில், பிரபல பேராசிரியர் கே.​பாரதி சிறப்​புரை ஆற்​றி​னார்.

அவர் பேசி​ய​தாவது: சென்​னையை சேர்ந்த எழுத்​தாள​ரான சூடா​மணி, 1950-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 50 ஆண்​டு​களுக்கு மேலாக பல்​வேறு இலக்​கியப் பத்​திரி​கை​களில் கதைகளை எழுதி தடம் பதித்​தவர்.

குறிப்​பாக, சிறுகதைகளில் வல்​லமை மிக்​கவ​ரான அவர், தமிழில் 500-க்​கும், ஆங்​கிலத்​தில் 300-க்​கும் மேற்​பட்ட சிறுகதைகளை​யும் படைத்​துள்​ளார். ஜெய​காந்​தன், ஜானகி​ராமன், அசோகமித்​ரன், சுந்தர ராம​சாமி, சிவசங்​கரி, வசந்தி போன்ற பெரும் ஆளு​மை​கள் எழு​தித் தள்​ளிய சமகாலத்​தில், இவரும் தன் எழுத்​து​களை பதிவு செய்​துள்​ளார். எனினும், இலக்​கிய உலகில் சூடா​மணிக்கு உரிய அங்​கீ​காரம் முழு​மை​யாக கிடைக்​க​வில்லை என்றே தோன்​றுகிறது.

வாழ்க்​கை​யைப் பற்​றிய மிக ஆழமான புரிதலை கொண்​டிருந்த சூடா​மணி, தன் கதைகளில் திருமண உறவு​கள் பற்றி பேசும்​போது, சிறு​வர்​கள் பொம்​மை​களுக்கு திரு​மணம் செய்து வைப்​ப​தை​போல, மணமக்​களின் உணர்​வு​களை​யும், விருப்​பங்​களை​யும் அறி​யாமல் பெரிய​வர்​கள் நடத்​தும் திரு​மணங்​கள், அத்​தகைய ஏற்​பாடு​களால் அமை​யும் குடும்​பங்​களில் தோன்​றும் குழப்​பங்​கள், உணர்​வுப் போராட்​டங்​கள் பற்​றி​யும் விரி​வாக விவரித்​திருக்​கிறார்.

அதே​நேரம், காதல் திரு​மணங்​களில் கூடு​தல் புரிதல் இருக்​குமே தவிர, அங்​கும் சிக்​கல்​கள் எழாமல் இருக்​காது என்​றும், உண்​மை​யான மற்​றும் வலிமை​யான அன்பு இருந்​தால் எத்​தகைய பிரச்​சினை​களை​யும் கடந்து வாழலாம் என்​றும் கூறுகிறார்.

வாழ்க்​கை​யில் நிகழக்​கூடிய சிறு, சிறு நெருடல்​களுக்கு எல்​லாம்​கூட சூடா​மணி பதில் வைத்​திருப்​பார். ‘வணக்​கம் நான் சாந்​தா’, ‘நான் தானே உன் மகள்’, ‘விருந்​தினர்​களில் ஒரு​வன்’, ‘கடிதம் வந்​தது’ போன்ற கதைகள் இதற்கு சான்​றுகளாக திகழ்​கின்​றன.

வளரிளம் பருவ குழந்​தைகளை பெற்​றோர்​ எப்​படி அணுக வேண்​டும் என்​ப​தை​யும் அவர் அழகாக விளக்​கி​யுள்​ளார். அவரது கதைகளில் வரும் மனிதர்​கள் எளி​தில் பிரிவ​தில்​லை. அவ்​வாறு பிரிந்​தா​லும் ஏதோ ஒரு புள்​ளி​யில் மீண்​டும் இணைந்து விடு​கிறார்​கள்.

உறவு​களில் எல்​லாரிடத்​தி​லும் நம்​மால் அன்பு காட்​டி​விட முடி​யாது. ஆனால், குறைந்​த​பட்​சம் நியாய உணர்ச்​சி​யோடு இருங்​கள் என்​கிறார் சூடா​மணி. இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில், முன்​னாள் நீதிபதி சந்​துரு, ஓய்​வு​பெற்ற ஐஏஎஸ் அதி​காரி திருப்​பு​கழ், அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தின் முதன்மை நூல​கர், தகவல்​ அலு​வலர்​ கா​மாட்​சி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>| படம்:எஸ். சத்தியசீலன் |</p></div>
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in