

சிறார் புத்தகங்கள் நிறைய வருகின்றன. அவர்களை ஈர்க்கும் விதமாகவும் அழகாக வெளிவரும் என்றால், நிச்சயம் குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தை தூண்டிவிட முடியும். 'பூனை யூஷ்கா' என்ற இந்த 36 பக்க நூல், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கதையம்சத்தைக் கொண்டது.
வீட்டு மனிதர்களிடம் நெருக்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பூனை யூஷ்காவுக்கு, வெளியாட்கள் வந்தால் பிடிக்காது. ரசிக்கத்தக்க சேட்டைகள் செய்து அந்த வீட்டு சிறுவனுக்கு நெருங்கிய துணையாகிவிட்ட யூஷ்காவை, சிலநாட்களில் நேர்ந்த அவனது பிரிவு எவ்வளவு வாட்டுகிறது என்பதை அலெக்சாந்தர் குப்ரீன், உள்ளம் கொள்ளைகொள்ளும் நடையில் உணர்த்திவிடுகிறார்.