

கதையா, கட்டுரையா என்று மனதுக்கு ஒரு மென்மயக்கத்தை ஏற்படுத்தினாலும் அதுவே மனதுக்கு நெருக்கமாய் இருக்கின்றன. எல்லோர் வாழ்விலும் தனது இருப்பை தேய்ந்து தேய்ந்து வளர்வது போல சில ஆத்மார்த்தமான, அந்தரங்கமான, அன்பான நினைவுகளை வாழ்க்கை முழுக்க மீட்டுக்கொண்டே இருக்கவைக்க முடிந்தாலும், எழுத்தால் சிலரால் மட்டுமே பதித்துவைக்க முடிகிறது.
ஒரு சம்பவத்தை, ஒரு நிகழ்வை, ஒரு நினைவை வாசிக்கும் மனதுக்குக் கடத்த முடிவது எல்லோராலும் இயலாது. ஆனால் இங்கே ஆசிரியரால் மிக எளிதாக ஆங்காங்கே மனம் நெகிழ வைக்க முடிகிறது. அப்படிப் பதிந்ததுதான் ‘பூமத்திய ரேகை’.