

முழுமையான கற்பனை என்று எதுவுமில்லை. எதார்த்தத்தின் பாதிப்பு இல்லாமல் எந்தப் படைப்பும் உருவாவதில்லை. சமகாலத்தின் படைப்புகளில் சங்க காலத்தின் நிழல் படிந்திருப்பதும் அப்படியானதொரு பாதிப்புதான் என்கிறார் கிருபாகரன்.
திரைப்படப் பாடல்களில் நாட்டம் கொண்ட இவர், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சங்க இலக்கியங்களின் பக்கம் சாய்ந்திருக்கிறார். தொடக்கத்தில் மேம்போக்காகப் படிக்கத் தொடங்கிப் பின் ஆர்வ மிகுதியில் தேடித் தேடிப் படித்ததன் பலனாக இந்த நூலை எழுதியிருக்கிறார்.