

எழுத்துக்குப் பால் பேதமில்லை எனச் சிலர் வாதிட்டாலும் ஓர் ஆண் எழுத வருவதற்கும் பெண் அந்தத் துறையில்கால் பதிப்பதற்கும் பாரதூரமான வேறுபாடு இன்றைக்கும் இருக்கிறது. எழுத்துக்கு விமர்சனங்கள் எழுவது இயல்பு.
ஆனால், எழுதப் புகுவதே பெரும் சாதனையாக இருந்தகாலத்தில் தடைகளைத் தாண்டித்தடம் பதித்த பெண்கள் சிலர், அடுத்த தலைமுறைப் பெண்களுக்குக் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கிறார்கள்.
அப்படியான முன்னோடி எழுத்தாளர்கள் 13 பேரின் எழுத்து வாழ்க்கையைச் சுருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார் ஸ்ரீதேவி மோகன். அவை வெறும் தகவல் திரட்டுகளாக இல்லாமல் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களை நன்கு அறிந்தவர்கள் ஆகியோரின் அனுபவப் பகிர்வுகளாக அமைந்திருக்கிறது.