ஓர் அரிய வாக்குமூலம்

ஓர் அரிய வாக்குமூலம்
Updated on
1 min read

உல​கத்​தமிழர் பேரமைப்​பின் நிறு​வனத் தலை​வ​ராக, மூத்த அரசி​யல்​வா​தி​யாக 93 வயதி​லும் செயல்​பட்​டு​வருபவர் பழ.நெடு​மாறன். அவருடன், செயற்​பாட்​டாளர் கண.குறிஞ்சி மேற​கொண்ட நேர்​காணலின் தொகுப்​பு​தான் இந்​நூல்.

பழ.நெடு​மாறனின் பாட்​ட​னார் அரிய நூல்​களைப் பதிப்​பித்​தவர். தந்​தை​யார், 40களில் மதுரை​யில் தமிழ் மாநாடு​கள் நடத்​தி​ய​வர். ‘தமிழ்​நாடு வாலிபர் சங்​கம்’ சார்​பில், 2ஆம் உலகப்​போரில் தப்​பி வந்த பர்மா தமிழர்​களைக் காத்து அரவணைத்​தவரும்​கூட.

தமிழர் மீதான பற்​றைப் பொறுத்​தவரை அவர்​களின் வழி​யில் சற்​றும் பிச​காதவ​ராகத் திகழ்​கிறார் பழ.நெடு​மாறன். பல்​கலைக்​கழக மாணவப் பரு​வத்​திலிருந்தே போராட வேண்​டிய சூழல் அவரை ஆட்​கொண்​டு​விடு​கிறது.

அது தொடங்கி ஈழத்​தமிழர் உரிமைக்​காக, காவிரி நீர் பிரச்​சினைக்​காக, ராஜீவ் காந்தி கொலை வழக்​கில் மரண தண்​டனையி​லிருந்து 26 தமிழர்​களைக் காப்​பாற்​ற​வும், சட்​டப் போராட்​டம் நடத்​த​வும் என எண்​ணற்​றப் போராட்​டங்​களில் பழ.நெடு​மாறன் வெற்​றிகண்​டதன் பின்​னணி உள்​ளிட்ட நூற்​றுக்​கணக்​கான தரவு​கள் இந்​நூலில் நிறைந்​துள்​ளன.

மேலும், இந்​நூலில் பிர​பாகரன், இந்​திரா காந்​தி, காம​ராஜர், நல்​ல​ கண்​ணு, சட்​டப்​ போ​ராட்​டங்​களுக்கு துணைநின்ற வழக்​கறிஞர்​கள், நீதி​யரசர்​களு​ட​னான நட்பு குறித்த செய்​தி​களும்​ படிப்​போரின்​ மனஇருளை அகற்​றி சுடர்​விட்​டுப்​ பிர​காசிக்​கின்​றன.

தமிழர் தலை​வர் பழ.நெடு​மாறன்

கண.குறிஞ்சி

புது​மலர் பதிப்​பகம்

விலை: ரூ.130

தொடர்​புக்​கு: 9443307681

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in