

கண்ணெதிரே தெரியும் உண்மைகளுக்கு மறுபக்க உண்மைகளையும் பார்க்கச் சொல்கின்றன கதிர்பாரதியின் கவிதைகள். ‘சலோமி’ குறித்த ஐந்து கவிதைகளில் முதல் கவிதையில்... யேசுவின் தாய் அருள்நிறை கன்னி மரிக்கு / நேரிளையத் தங்கையவள் என அறிமுகப்படுத்தப்படும் ‘சலோமி’ பலப்பல கோணங்களில் ஏசுவின் வாழ்வில் வந்தவள்.
‘யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள்’ என்றெல்லாம் விதந்தோதப்பட்டாலும் அவளுக்கான முக்கியத்துவம் மிகவும் குறைவு. இங்கிருந்துதான் தனது பார்வையை முன்வைக்கிறார் கதிர்பாரதி. / எங்களூரிலும் ஒரு சலோமி வாழ்ந்தாள் / எனத் தொடங்குகிறார்.