

கலைகளுள் மிகவும் மேன்மை பொருந்தியதாக போற்றப்படும் பஞ்சபட்சி சாஸ்திரம், சிவபெருமானால் பார்வதி தேவியிடம் கூறப்பட்டதாக ஐதீகம். இந்தக் கலையை அறிந்திருந்தால், அனைத்திலும் வெற்றி காணலாம் என்று அறியப்படுகிறது.
பஞ்சபட்சி சாஸ்திரத்தைக் கொண்டு வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவைகளின் குணநலன்களை மனிதரோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது.