

கப்பல், விமானப் பயணங்களைக் கனவாக எண்ணும் சாமானியர்களுக்குப் பேருந்தும் ரயிலும் நட்புத்துணை. குறிப்பாக, ரயில் பயணங்கள் பெரியவர்களையும் நடுத்தர வயதினரையும் கூடக் குழந்தைகளாக்கிவிடும்.
அந்தப் பயணங்களின்போது, ரயில்வே துறையைச் சார்ந்தவர்களின் வாழ்வு சொர்க்கமாகத் தெரியக்கூடும். உண்மையில் அவர்களது நிலைமை அப்படித்தான் இருக்கிறதா என்பதனைச் சொல்கிறது ‘பச்சை மஞ்சள் சிவப்பு’ நாவல்.