

சென்னை விளிம்புநிலை மக்களின் அன்றாடங்கள் வலிமிகுந்தவை. லேத் வேலைக்காரர்கள், சிறு நிறுவனங்களில் கணக்கெழுதுபவர்கள், ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், ஓய்வுபெற்று வீட்டோடு இருப்பவர்களே தொகுப்பின் கதைமாந்தர்கள்.
பட்டறைகளில் தூக்கியெறியப்படும் துகள்களை இரும்புக் கடைகளில் விற்று பிழைப்பு நடத்துபவர்களும் உண்டு. இக்கதைகள் பலவும் சிறு வருமானத்துக்கு உட்பட்ட வரவுசெலவு சண்டைகள், கணவன் மனைவி ஊடல்கள், தாய் தந்தையர் பிரிவுச் சிக்கல்களிலிருந்து வெளியேறி தவறான பாதைகளில் செல்லும் பதின்பருவத்தினர் என பலரின் கதைகளும் வெவ்வேறு கிளைகளாய் விரிகின்றன.