கல்விச் சூழலின் பண்பாட்டு ஆவணம்

கல்விச் சூழலின் பண்பாட்டு ஆவணம்
Updated on
1 min read

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், குறிப்பாக அறுபதுகளில் தமிழ்க் கல்விச் சூழல் எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் முக்கியமான நாவல் க.பஞ்சாங்கம் எழுதியுள்ள 'ஒரு பேராசிரியரின் கதை’. தலைப்பு பேராசிரியரின் கதையாக இருந்தாலும், ஆறுமுகம் என்கிற முதல் தலைமுறை மாணவன், எவ்வாறு பேராசிரியராகிறான் என்பதைப் பதிவு செய்யும் தன்மையிலேயே இந்த ​நாவல் அமைந்​துள்​ளது.

சுயசரிதைத் தன்​மை​யுடன் எழுதப்​பட்​டாலும், அறு​பதுகளில் நில​விய சமூகச் சூழலைக் கண்​முன் நிறுத்​தி​யுள்​ளது இந்த நாவல். நகரமய​மாதலின்​போது, கிராமத்​திலிருந்து நகரத்​திற்​குப் படிக்க வரும் மாணவன் எதிர்​கொள்​ளும் சிக்​கல்​கள், ஆங்​கிலம் தெரி​யாத​தால் ஏற்​படும் தாழ்வு மனப்​பான்​மை, கல்​லூரி விடு​தி​களில் கழிப்​பறையைப் பயன்​படுத்​தத் தெரி​யாமல் தவிக்​கும் அவலம், கால் செருப்பு அணி​யாமலேயே பதின்​பரு​வத்​தைக் கடக்​கும் துயரம் யாவற்​றை​யும் பஞ்​சாங்​கம் இந்த நாவலில் அற்​புத​மாகப் பதிவு செய்​துள்​ளார்.

மதுரை​யில் தியாக​ராயர் கல்​லூரி​யில் தமிழ் பயின்​ற​போது, அறு​பத்​தைந்​தில் நடந்த இந்தி எதிர்ப்​புப் போராட்​டம், தமிழகத்​தில் நில​விய கொந்​தளிப்பு நிலை, தமிழகப் பேரறிஞர் அண்​ணா​வின் மறைவு, முதலிய அரசி​யல் சூழலை விவரிப்​ப​தாக​வும் இந்த நாவல் அமைந்​துள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in